இனிப்பு பூந்தி | Inipu Boondi Recipe In Tamil #SweetBoondi #sweet #shorts #easysweetrecipe
Description :
இனிப்பு பூந்தி | Inipu Boondi Recipe In Tamil | Sweet Boondi | @HomeCookingTamil
#inipuboondi #inippuboondi #sweetboondirecipe #hemasubramanian
இனிப்பு பூந்தி
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 3 கப் (வாங்க:https://amzn.to/45k4kza)
தண்ணீர்
ரெட் புட் கலர் ஜெல் – 3 சொட்டு (வாங்க: https://amzn.to/45pO1kz)
பச்சை கலர் பவுடர் (வாங்க: https://amzn.to/45pO1kz)
எண்ணெய் – பொரிப்பதற்கு (வாங்க: https://amzn.to/2RGYvrw)
முந்திரி (வாங்க: https://amzn.to/3DS0FNr)
திராட்சை (வாங்க: https://amzn.to/36WfLhN)
சர்க்கரை – 2 கப் (வாங்க: https://amzn.to/45k7SkY)
ஏலக்காய் தூள் (வாங்க: https://amzn.to/2U5Xxrn )
பச்சகற்பூரம் (வாங்க: https://amzn.to/3adM26i)
செய்முறை:
1. முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் கடலை மாவு எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி மிருதுவான மாவாக கலக்கவும்.
2. இரண்டு தனித்தனி கிண்ணங்களில் சிறிது சிறிதாக போட்டு, ஒன்றில் சிவப்பு நிற உணவு வண்ணங்களையும், மற்றொன்றில் பச்சை நிற உணவு வண்ணங்களையும் சேர்த்து கலக்கவும்.
3. இப்போது ஒரு அகன்ற கடாயில் எண்ணெயை சூடாக்கி இதில் ஒரு துளையிட்ட கரண்டியின் உதவியுடன், மாவை சேர்த்து பொரிக்கவும்.
4. பூந்தியை வறுத்த பின் சிவப்பு, பச்சை இரண்டையும் அப்படியே வறுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைக்கவும். அதன் பிறகு முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.
5. இப்போது சர்க்கரை பாகுக்கு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து, உருகிய பின், மூன்று-நான்கு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். இது தொட்டால் ஓட்டும் தன்மையில் இருக்க வேண்டும்.
6. இப்போது பூந்தியில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், பச்சகற்பூரம் சேர்த்து நன்கு கலக்கவும், பின் சூடான சர்க்கரை பாகு சேர்த்து நன்கு கலக்கவும். ஐந்து நிமிடம் கழித்து நன்றாக ஊறினால், இனிப்பு பூந்தி தயார் உடனே பரிமாறலாம்.
Date Published | 2024-11-23 08:30:15 |
Likes | 436 |
Views | 11967 |
Duration | 59 |