ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ் | Healthy Snacks Recipes in Tamil | Ellu laddu | Uluntha Vadai

ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ் | Healthy Snacks Recipes in Tamil | Ellu laddu | Uluntha Vadai

Description :

ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ் | Healthy Snacks Recipes in Tamil | Ellu laddu | Uluntha Vadai | @HomeCookingTamil

#krishnajayanthispecialrecipes #sesameladdu #ladoorecipe #karuppuulluthuvadai #blackuraddalrecipes #healthysnacksrecipeintamil #breakfastrecipesintamil

Chapters
Promo: 00:00 – 0:13
எள்ளு லட்டு: 0.14 – 4:21
கருப்பு உளுந்து வடை: 4:22 – 8:03

எள்ளு லட்டு
தேவையான பொருட்கள்

வெள்ளை எள்ளு – 1 கப் (250 மில்லி கப் )
வேர்க்கடலை – 1/2 கப் வறுத்தது
கொப்பரை தேங்காய் – 3/4 கப் துருவியது
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
வெல்லம் – 3/4 கப் துருவியது
நெய்

செய்முறை:
1. கடாயில் எள்ளு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
2. பின்பு வறுத்த வேர்க்கடலை சேர்த்து 2 நிமிடம் வறுத்து எடுக்கவும்.
3. பிறகு கொப்பரை தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
4. பின்பு அனைத்தையும் நன்கு ஆறவிட்டு, பின்பு மிக்ஸியில் வறுத்த எள்ளு மற்றும் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
5. பிறகு வறுத்த கொப்பரை தேங்காய் சேர்த்து அரைக்கவும், பின் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
6. அடுத்து அரைத்த எள்ளை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி அதில் நெய் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
7. எள்ளு லட்டு தயார்!

கருப்பு உளுந்து வடை
தேவையான பொருட்கள்

கருப்பு உளுத்தம் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/4 கப் (Buy: https://amzn.to/2T8oLwA)
இஞ்சி – 1 சிறிய துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
தண்ணீர்
வெங்காயம் – 1/2 நறுக்கியது
மிளகு தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
கறிவேப்பிலை நறுக்கியது
எண்ணெய் – பொரிப்பதற்கு (Buy: https://amzn.to/2RGYvrw)

செய்முறை:
1. ஒரு மிக்ஸியில் ஊறவைத்த பச்சரிசி, கருப்பு உளுத்தம் பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
2. அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகு தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
3. ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
4. பிறகு இரண்டு கைகளிலும் தண்ணீர் தடவி, சிறிதளவு மாவை எடுத்து தட்டி நடுவில் ஓட்டை இட்டு சூடான எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
5. சுவையான கருப்பு உளுந்து வடை தயார்.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-08-20 09:00:30
Likes 230
Views 12955
Duration 8:3

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..