ஆம்லெட் குழம்பு | Omelette Curry Recipe in Tamil

ஆம்லெட் குழம்பு | Omelette Curry Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

ஆம்லெட் குழம்பு

தயாரிப்பு நேரம் – 20 நிமிடங்கள்
சமையல் நேரம் – 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

மசாலா விழுது தயாரிக்க

தேங்காய் -2 மேசைக்கரண்டி ( துருவியது )
இஞ்சி – 1 துண்டு ( நறுக்கியது )
பூண்டு – 4 பற்கள்
சோம்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
தண்ணீர்

குழம்பு தயாரிக்க

தக்காளி – 2 ( நறுக்கியது )
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1 ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் -1
உப்பு -2 தேக்கரண்டி
தண்ணீர்

ஆம்லெட் தயாரிக்க

பெரிய வெங்காயம் -1 ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் -1 (பொடியாக நறுக்கியது )
முட்டை – 4
கொத்தமல்லி இலை
தேவையான அளவு உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மிளகு தூள்
எண்ணெய்

#ஆம்லெட்குழம்பு #OmeletteCurry #EggRecipes

செய்முறை
1. ஆம்லெட் முட்டை குழம்பிற்கு முதலில் மசாலா விழுது தயாரிக்க வேண்டும்
2. மசாலா விழுது தயாரிக்க துருவிய தேங்காய், இஞ்சி ,பூண்டு, ,சோம்பு , சீரகம், மல்லித்தூள் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்
3. அடுத்து இரண்டு தக்காளிகளை நறுக்கி அரைத்துக்கொள்ளவும்
4. ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மசாலாவிழுது,அரைத்த தக்காளி, தண்ணீர் சேர்த்து பத்து நிமிடத்திற்கு வேக வைக்கவும்
5. ஆம்லெட் தயாரிக்க பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், முட்டை, மிளகு தூள் சேர்த்து கலக்கவும்
6. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஆம்லெட் கலவையை ஊற்றி ஆம்லெட் தயார் செய்யவும்
7. தயாரான ஆம்லெட்டை பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்
8. வெட்டிய துண்டுகளை குழம்பில் சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு கொதிக்க விடவும்
9. சூடான மற்றும் சுவையான ஆம்லெட் குழம்பு தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.86

Date Published 2019-03-07 07:30:58Z
Likes 2016
Views 131112
Duration 0:05:07

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..