அவல் உப்மா | Aval Upma In Tamil | #shorts #avalupma
Description :
அவல் உப்மா | Aval Upma In Tamil | #shorts #avalupma
#avalupma #shorts #upmarecipes #breakfastrecipesintamil #avalrecipesintamil
அவல் உப்மா
தேவையான பொருட்கள்
அவல் – 2 கப் (250 மி.லி) (Buy: https://amzn.to/3s5kqyk )
வேர்க்கடலை – 1/2 கப் (Buy: https://amzn.to/3s5kqyk )
எண்ணெய் (Buy: https://amzn.to/3KxgtsM)
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
கடுகு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp )
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
சிவப்பு மிளகாய் – 3 (Buy: https://amzn.to/37DAVT1)
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 4 கீறியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. அவலை தண்ணீரில் மூன்று முறை நன்கு கழுவி, தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.
2. ஒரு கடாயை எடுத்து, எண்ணெய் சேர்த்து, வேர்க்கடலையை பொன்னிறமாக வறுக்கவும். அவற்றை ஒதுக்கி வைக்கவும்.
3. அகலமான கடாயை எடுத்து எண்ணெய் சேர்க்கவும். அதை சூடாக்கவும்.
4. உளுத்தம்பருப்பு, கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும்.
5. கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், நறுக்கிய சிவப்பு மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் சில நொடிகள் வதக்கவும்.
7. கடாயில் அவலை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். ருசி பார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
8. வறுத்த வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். எல்லாவற்றையும் கலக்கவும்.
9. எலுமிச்சைபழச்சாறு சேர்த்து, தீயை அணைத்து, நன்கு கலக்கவும்.
10. கடைசியாக சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
11. வறுத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, சேவ் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து அலங்கரிக்கவும்.
12. சுவையான அவல் உப்மா சூடாக பரிமாற தயாராக உள்ளது.
Date Published | 2024-05-23 03:35:10 |
Likes | 371 |
Views | 13643 |
Duration | 1: |