அருமையான காய்கறி வறுவல் ரெசிப்பீஸ் | Vegetable Fry Recipes In Tamil | Side Dish For Sambar & Rasam
Description :
அருமையான காய்கறி வறுவல் ரெசிப்பீஸ் | Vegetable Fry Recipes In Tamil | Side Dish For Sambar & Rasam | @HomeCookingTamil
#vegetablefry #sidedishforsambar #vendaikkaifry #valakkaivaruval #kovakkaifry
Chapters:
Promo – 00:00
Arbi Fry: 00:24
Kovakkai Fry: 03:14
Bhindi Fry: 07:28
Vazhakkai Fry: 10:18
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
சேப்பங்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்
சேப்பங்கிழங்கு – 1/2 கிலோ
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
கடலை மாவு – 2 தேக்கரண்டி
அரிசி மாவு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
இடித்த பூண்டு (விரும்பினால்)
செய்முறை:
1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்க்கவும்.
2. பின்பு சேப்பங்கிழங்கு சேர்த்து 20 நிமிடம் வேகவிடவும்.
3. பிறகு நன்கு ஆறவிட்டு தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.
4. பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. பின்பு சேப்பங்கிழங்கில் மசாலாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கிய சேப்பங்கிழங்கை சேர்த்து வறுக்கவும்.
7. பின்பு இடித்த பூண்டு சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் வறுக்கவும்.
8. அட்டகாசமான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்!
கோவக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கோவக்காய் – 250 கிராம்
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1/4 கப்
மசாலா தூள் அரைக்க
துருவிய தேங்காய் – 1/4 கப்
சிவப்பு மிளகாய் – 6
பூண்டு – 5 பற்கள்
பொட்டுக்கடலை – 2 மேசைக்கரண்டி
வெண்டைக்காய் ப்ரை
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – 1 கிலோ
கடலை மாவு – 1/4 கப்
அரிசி மாவு – 1/4 கப்
சோள மாவு – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
முந்திரி பருப்பு, வேர்க்கடலை
பச்சை மிளகாய் – 6 நீளவாக்கில் நறுக்கியது
கறிவேப்பிலை
பூண்டு – 5 தோலுடன் இடித்தது
செய்முறை:
1. வெண்டைக்காயை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டவும்.
2. பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வெண்டைக்காய் துண்டுகளுடன் சேர்த்து கலக்கவும்.
3. பிறகு சிறிதளவு தண்ணீர் தெளித்து கலந்து 5 நிமிடம் ஊறவிடவும்.
4. ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி வெண்டைக்காயை துண்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
5. அடுத்து ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, வேர்க்கடலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இடித்த பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும்.
6. வறுத்த அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து வறுத்து வைத்த வெண்டைக்காய் உடன் சேர்த்து கலக்கவும்.
7. சுவையான வெண்டைக்காய் ப்ரை தயார்.
வாழைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
கடலை மாவு – 1 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
செய்முறை
1. வாழைக்காய்’யை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் போட்டு வைக்கவும்.
2. சிறிய கிண்ணத்தில், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள்,
காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள், கடலை மாவு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கவும் .
3. கலந்த மசாலாவை வாழைக்காய் துண்டில் போட்டு நன்கு பிரட்டவும்.
4. இதை 30 நிமிடம் ஊறவைக்கவும்.
5. அகல பேன்’னில் எண்ணெய் ஊற்றி, இதில் வாழைக்காய் துண்டுகளை போட்டு இருபுறமும் வறுக்கவும்.
6. இதை தனித்தனி துண்டுகளாக வறுக்கவேண்டும்.
7. பேன்’னில் எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை போடவும்.
8. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இதில் வறுத்த வாழைக்காய் துண்டுகளை போட்டு, கிளறவும்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-05-23 09:00:17 |
Likes | 1394 |
Views | 150704 |
Duration | 14:38 |