அருமையான இஞ்சி சமையல் வகைகள் | Ginger Recipes | Immune Boosting Recipes | @HomeCookingTamil
Description :
அருமையான இஞ்சி சமையல் வகைகள் | Ginger Recipes | Immune Boosting Recipes | @HomeCookingTamil
#அருமையானஇஞ்சிசமையல்வகைகள் #GingerRecipes #ImmuneBoostingRecipes #இஞ்சி #homecookingtamil
Chapters:
Promo – 00:00
இஞ்சி சர்பத் – 00:23
இஞ்சி புளி – 04:09
இஞ்சி சட்னி – 08:36
சுக்கு காபி – 11:13
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
இஞ்சி சர்பத்
தேவையான பொருட்கள்
இஞ்சி சிரப் செய்ய
இஞ்சி – 300 கிராம்
தண்ணீர் – 5 கப்
சர்க்கரை – 2 கப் (Buy: https://amzn.to/38wnYus)
இஞ்சி சர்பத் செய்ய
இஞ்சி சிரப்
எலுமிச்சை பழச்சாறு – 1 பழம்
எலுமிச்சைபழ துண்டுகள்
புதினா இலை
ஐஸ் கட்டிகள்
சோடா
செய்முறை
1. இஞ்சி தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2. நறுக்கிய இஞ்சியை பாத்திரத்தில் போட்டு , தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்கவிடவும்
3. இஞ்சி சாறை வடிக்கட்டவும்
4. வடிக்கட்டிய சாறை பாத்திரத்தில் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
5. இஞ்சி சாறு சிறிது கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
6. கொதித்த இஞ்சி சிரப்’பை ஆறவிட்டு, கிளாஸ் பாட்டில்’லில் ஊற்றி பிரிட்ஜ்’ஜில் வைத்து பயன்படுத்தவும்.
7. இஞ்சி ஷர்பத் செய்ய, செய்த இஞ்சி சிரப்’பை ஊற்றி, ஒரு எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும் .
8. அடுத்து இதில் புதினா இலை, எலுமிச்சைபழ துண்டுகள், ஐஸ் கட்டிகள் போடவும்.
9. இறுதியாக சோடா ஊற்றி, நன்கு கலக்கவும்.
10. சுவையான இஞ்சி சர்பத் தயார்.
இஞ்சி புளி
( காரமான இஞ்சி கறி )
புளி – 1 பெரிய எலுமிச்சைபழ அளவு
இஞ்சி – 200 கிராம் நறுக்கியது
சூடு தண்ணீர்
நல்லெண்ணெய் – 6 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 15 நறுக்கியது
பச்சை மிளகாய் – 4 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 முழு தேக்கரண்டி
பொடித்த வெல்லம் – 7 தேக்கரண்டி
தாளிப்பு செய்ய
எண்ணெய்- 1 1/2 தேக்கரண்டி
உளுந்து – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை ( விரும்பினால் )
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் புளி மற்றும் சூடு தண்ணீர் சேர்த்து ஊறவிடவும்.
2. இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
3. ஒரு இரும்பு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வதக்கவும்.
4. பிறகு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்.
5. இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும், இதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
6. அடுத்து ஊறவைத்த புளியை கரைத்து வடிகட்டி ஊற்றவும்.
7. குழம்பு கொதித்து கெட்டியாக ஆரம்பித்ததும், பொடித்த வெல்லத்தை சேர்க்கவும்.
8. பிறகு மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்கவிடவும். பின்பு அடுப்பை அணைத்து இறக்கிவிடவும்.
9. மற்றோரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உளுந்து, கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து கடுகு பொரிய ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து கறிவேப்பிலை சேர்த்து குழம்பில் ஊற்றி கிளறவும்.
10. இஞ்சி புளி தயார்.
இஞ்சி சட்னி
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
இஞ்சி – 1/2 கப் நறுக்கியது
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 6
காய்ந்த மிளகாய் – 6
புளி – 2 துண்டு
துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை – 1/2 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்
வெல்லம் – 1 துண்டு
தாளிப்பு செய்ய
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காய தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பில்லை
செய்முறை
1. கடாயில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் , புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
2. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
3. இதில் உப்பு சேர்த்து கிளறி, ஆறவிடவும்.
4. ஆறிய கலவையை, மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
5. முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
6. தாளிப்பு கரண்டியில், எண்ணெய் ஊற்றி, இதில் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்க்கவும்.
7. தாளித்த பொருட்களை சட்னி மேல் ஊற்றவும்.
8. சுவையான இஞ்சி சட்னி தயார்.
சுக்கு காபி செய்ய
தேவையான பொருட்கள்
சுக்கு மல்லி காபி தூள் செய்ய
சுக்கு – 40 கிராம்
தனியா – 30 கிராம்
மிளகு – 5 கிராம்
சுக்கு காபி செய்ய
தண்ணீர் – 500 மி.லி
சுக்கு மல்லி காபி தூள் – 3 தேக்கரண்டி
நாட்டு சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-03-07 09:00:07 |
Likes | 239 |
Views | 12710 |
Duration | 13:50 |