அரிசி பருப்பு சாதம் | Arisi Paruppu Sadam Recipe In Tamil | #shorts #ArisiParuppusadamRecipe
Description :
அரிசி பருப்பு சாதம் | Arisi Paruppu Sadam Recipe In Tamil | #shorts #ArisiParuppusadamRecipe
#அரிசிபருப்புசாதம் #ArisiParuppusadamRecipeinTamil #LunchBoxRecipes #homecookingtamil
அரிசி பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப் (250 மி.லி கப்)
துவரம் பருப்பு – 1/2 கப் (250 மி.லி கப்)
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சைமிளகாய் – 2 கீறியது
பூண்டு – 6 பற்கள் தட்டியது
இஞ்சி – 1 சிறிய துண்டு துருவியது
தக்காளி – 2 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
ஊறவைத்த அரிசி பருப்பு
தண்ணீர் – 2 1/2 கப் (250 மி.லி கப்)
உப்பு
செய்முறை
1. முதலில் பச்சரிசி, துவரம் பருப்பை 30 நிமிடம் ஊறவைக்கவும்.
2. குக்கரில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி அவை சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து கலந்து விடவும்.
3. கடுகு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமானதும் 6 பற்கள் தட்டிய பூண்டு, துருவிய இஞ்சி சேர்த்து கலந்து விடவும்.
5. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
7. பின்பு ஊறவைத்த அரிசி பருப்பு சேர்த்து கலந்து விடவும்.
8. தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு தேவைப்பட்டால் உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
9. சுவையான அரிசி பருப்பு சாதம் தயார்.
Date Published | 2024-05-05 03:30:05 |
Likes | 469 |
Views | 17555 |
Duration | 1: |