அட்டகாசமான STREET FOOD ரெசிப்பீஸ் | Delicious Street Food Recipes In Tamil | Egg Bhejo | Bhel Puri
Description :
அட்டகாசமான STREET FOOD ரெசிப்பீஸ் | Delicious Street Food Recipes In Tamil | Egg Bhejo | Bhel Puri | @HomeCookingTamil
#streetfoodrecipes #eggbhejo #bhelpurirecipe #masalatoast #chillimomos
Chapters:
Promo – 00:00
Egg Bhejo: 00:20
Masala Bread Toast: 04:21
Chilli Momos: 09:16
Bhel Puri: 13:27
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
முட்டை பேஜோ
தேவையான பொருட்கள்
எண்ணெய்
வெங்காயம் – நீளமாக நறுக்கியது
பூண்டு – நீளமாக நறுக்கியது
காய்ந்த சிவப்பு மிளகாய் – 10
வேகவைத்த முட்டை
உப்பு கரைத்த தண்ணீர்
எலுமிச்சை தண்ணீர்
புளி தண்ணீர்
கொத்தமல்லி இலை
செய்முறை
1. முட்டை பேஜோ செய்ய, ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
2. காய்ந்த மிளகாய் ஆறிய பின் அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் பொரித்த பூண்டை பொடித்து போடவும்.
4. இதனுடன் பொரித்த வெங்காயம், அரைத்த காய்ந்த மிளகாய் பொடியை தேவையான அளவு கலந்து வைக்கவும்.
5. முட்டையை வேக வைத்து தோலுரித்து எடுத்து வைக்கவும்.
6. வேகவைத்த முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் பொரித்த வெங்காயம் பூண்டு கலவையை வைக்கவும்
7. இதன்மேல் எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் போடவும். இவை அனைத்தையும் சில துளிகள் மட்டும் போடவும்
8. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
மசாலா பிரட் டோஸ்ட்
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள்
வெங்காயம் – 1 நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
கேரட் – 1 கப் துருவியது
முட்டைக்கோஸ் – 1 கப் துருவியது
குடைமிளகாய் நறுக்கியது
பீன்ஸ் – 1/2 கப் நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
வெண்ணெய்
உப்பு, எண்ணெய்
செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் கடுகு, சீரகம் சேர்க்கவும்.
2. கடுகு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து பீன்ஸ், குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும்.
4. பிறகு தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
5. பின்பு கரம் மசாலா தூள், கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். பிறகு எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கலந்து விடவும்.
6. பிரட்டை முக்கோண வடிவில் வெட்டி கொள்ளவும்.
7. ஒரு பானில் வெண்ணெய் சேர்த்து வெண்ணெய் உருகியதும் பிரட்டை வைத்து இருபுறமும் டோஸ்ட் செய்யவும்.
8. தயார் செய்த காய்கறி மசாலாவை டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளின் மேல் வைக்கவும்.
9. மசாலா பிரட் டோஸ்ட்டை சிறிது கெட்சப் உடன் பரிமாறவும்.
சில்லி மோமோஸ்
தேவையான பொருட்கள்
மேல் மாவு செய்ய
மைதா – 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
தண்ணீர்
காய்கறி கலவை செய்ய
வெங்காயம் – 1/2 கப் நறுக்கியது
கேரட் – 1/4 கப் நறுக்கியது
பீன்ஸ் – 1/4 கப் நறுக்கியது
பூண்டு – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
முட்டைகோஸ் – 1/4 கப் நறுக்கியது
குடைமிளகாய் – 1/4 கப் நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள்
சில்லி மோமோஸ் செய்ய
எண்ணெய்
பூண்டு – 1 தேக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
குடைமிளகாய் – 1 நறுக்கியது
சில்லி பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் – 3 மேசைக்கரண்டி
லைட் சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
உப்பு
மிளகு தூள்
செய்முறை
1. மேல் மாவு செய்ய, அகல பாத்திரத்தில், மைதா, உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் பிசையவும்.
2. இதை சிறிய உருண்டைகளாக பிரித்து எடுத்து வைக்கவும்.
3. அடுத்து காய்கறி கலவை செய்ய, பாத்திரத்தில், வெங்காயம், கேரட், பீன்ஸ், பூண்டு, இஞ்சி, குடைமிளகாய், முட்டைகோஸ், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து எடுத்து வைக்கவும்.
4. செய்த மாவு உருண்டையை தேய்க்கவும்.
5. இதன் நடுவில் காய்கறி கலவை வைத்து மூடவும்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் மோமோஸ்’ஸை வறுக்கவும்.
7. பொன்னிறமானதும், மோமோஸ்’ஸை எடுத்து வைக்கவும்.
8. அதே கடாயில் பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
9. அடுத்து இதில் சில்லி பேஸ்ட், தக்காளி கெட்சப், லைட் சோயா சாஸ் சேர்த்து கலக்கவும்.
10. இதில் வறுத்த மோமோஸ்’ஸை சேர்த்து கிளறவும்.
11. தேவைப்பட்டால் உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.
12. சில்லி மோமோஸ் தயார்.
பேல் பூரி
தேவையான பொருட்கள்
பொரி – 100 கிராம்
நம்கீன்
வறுத்த வேர்க்கடலை
வேகவைத்த உருளைக்கிழங்கு
வெங்காயம் நறுக்கியது
தக்காளி – விதை நீக்கி நறுக்கியது
சேவ்
பாப்டி
உப்பு
காஷ்மீரி மிளகாய் தூள்
சாட் மசாலா தூள்
கொத்தமல்லி இலை
புதினா கொத்தமல்லி சட்னி
புளி பேரிச்சம்பழ சட்னி
எலுமிச்சைபழச்சாறு
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-08-15 09:00:40 |
Likes | 320 |
Views | 18801 |
Duration | 18:19 |