ஃப்ரிட்டாடா | Egg Frittata Recipe in Tamil | Easy Breakfast Frittata

ஃப்ரிட்டாடா | Egg Frittata Recipe in Tamil | Easy Breakfast Frittata

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

ஃப்ரிட்டாடா | Egg Frittata in Tamil | Spanish Omelette

தேவையான பொருட்கள்

முட்டை – 6
பால் – 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு
வெங்காயம் – 1
மிளகுத்தூள்
சிவப்பு குடைமிளகாய்
காளான்
இத்தாலியன் சீசனிங் – 1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் சிதறல்கள் – 1 மேசைக்கரண்டி
மொஸெரெல்லா சீஸ்
உப்பு
மிளகு

#ஃப்ரிட்டாடா ##Frittata #SpanishOmelette

செய்முறை

1. ஃப்ரிட்டாடா செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் ஆறு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, தேவையான அளவு மிளகு தூள், சிறிதளவு பால் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக்கொள்ளவும்
2. அடுத்து ஒரு கடாயில் வெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
3. வெங்காயம் பொன்னிறமானவுடன் அதில் பொடியாக நறுக்கிய பச்சை குடை மிளகாய், பொடியாக நறுக்கிய சிவப்பு குடை மிளகாய், மெல்லிதாக நறுக்கிய காளான், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு மிளகு தூள், இத்தாலியன் சீசனிங், காய்ந்த மிளகாய் சிதறல்கள் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்
4. இந்த கலவையில் கலக்கி வைத்த முட்டையை ஊற்றி துருவிய மொஸெரெல்லா சீஸ் சேர்த்து ஐந்து நிமிடத்துக்கு கடாயை மூடி வேகவைக்கவும்
5. ஐந்து நிமிடத்திற்கு பின்பு ஆரோக்கியமான மற்றும் சுவையான முட்டை ஃப்ரிட்டாடா தயார்.


Rated 4.89

Date Published 2019-05-15 10:16:56Z
Likes 723
Views 35524
Duration 0:03:34

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..