ஹைதராபாத் கத்திரிக்காய் குழம்பு | Hyderabadi Bagara Baingan Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
ஹைதராபாத் கத்திரிக்காய் குழம்பு | Hyderabadi Bagara Baingan in Tamil
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கத்திரிக்காய் – 8
இஞ்சி எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர்
புளிக்கரைசல் – 1/4 கப்
பச்சை மிளகாய்
கொத்தமல்லி இலை
மசாலா விழுது தயாரிக்க
வறுத்த வேர்க்கடலை – 2 மேசைக்கரண்டி
எள் – 2 மேசைக்கரண்டி
கச கசா – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 3 மேசைக்கரண்டி
வெங்காய விழுது தயாரிக்க
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் – 3
#hyderabadibagarabainganrecipe #brinjalrecipe #ஹைதராபாத்கத்திரிக்காய்குழம்பு
செய்முறை
1. ஹைதராபாத் கத்தரிக்காய் குழம்பு செய்ய முதலில் ஒரு மசாலா விழுது தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு கடாயில் வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்
2. வேர்க்கடலை வறுத்த பின்பு அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எள் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்
3. எள்ளை நன்கு வறுத்த பின்பு அதே கடாயில் கசகசா சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்
4. துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுக்கவும்
5. இந்த வறுத்த கலவைகளை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்
6. அடுத்து எட்டு கத்தரிக்காய்களை எடுத்து தலைப்பகுதியை விட்டு விட்டு அதன் கீழ் பகுதிகளை நான்கு பகுதிகளாகப் பிரிக்கவும்
7. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து இந்த நறுக்கிய கத்திரிக்காய்களை கடாயில் சேர்த்து நன்கு வதக்கவும்
8. கத்தரிக்காய் பாதி வெந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும்
9. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
10. பொன்னிறமான வெங்காயத்தை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
11. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
12. இதனுடன் அரைத்த வெங்காயம் விழுது, மசாலா விழுது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், ஒரு கப் தண்ணீர், கரைத்த புளி சேர்த்து நன்கு கிளறவும்
13. வேகவைத்த கத்தரிக்காய்களை இந்த மசாலாவில் சேர்த்து நன்கு கிளறிய பின்பு கடாயை மூடி 15 நிமிடம் வேக வைக்கவும்
14. 15 நிமிடம் கழித்து சுவையான ஹைதராபாத் கத்தரிக்காய் குழம்பு தயார்
Date Published | 2019-07-09 07:39:00Z |
Likes | 310 |
Views | 13271 |
Duration | 0:05:06 |
Super
Mam pls kulambu veraites poduga mam pls
Hai mam… I'm a big fan of ur Tamil and ur dressing…
அருமை.பன்னீர்பட்டர்மசாலாசெய்துகாட்டுங்கமேடம்
Dish is super yummy…..but ur smile is so sweet madam…..I like ur smiling face very much mam
100 th like by me i am surprised that no dislike u r doing great mam do more videos
Superb mam I will try this tomorrow
Can have with rice?
Superb mam…
super madam
Super
Super mam
Arumai medam.
Arumai
Iiiiiii na tha fst like & commend
Supper mam