ஸ்பைசி கார்லிக் சிக்கன் | Spicy Easy Garlic Chicken Recipe in Tamil | @HomeCooking Tamil

ஸ்பைசி கார்லிக் சிக்கன் | Spicy Easy Garlic Chicken Recipe in Tamil | @HomeCooking Tamil

Description :

ஸ்பைசி கார்லிக் சிக்கன் | Spicy Garlic Chicken In Tamil | Fried Chicken | Chicken Recipe | Chicken Starter Recipe | Boneless Chicken Recipe | @HomeCooking Tamil

#spicygarlicchicken #ஸ்பைசிகார்லிக்சிக்கன் #garlicchicken #starter #chickenrecipe #easychickenrecipes #koreanfood #chickenstirfry #chinesefriedchicken #chickenstarterrecipes #friedchicken #crispychicken #bonelesschickenrecipe #koreancooking #koreanfriedchicken #homecooking #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Garlic Chicken: https://youtu.be/8RBhlJA4L_w

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஸ்பைசி கார்லிக் சிக்கன்
தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க

எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
பூண்டு – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 1/2 மேசைக்கரண்டி நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
சோளமாவு – 3 1/2 மேசைக்கரண்டி
முட்டை – 1
எண்ணெய் – பொரிப்பதற்கு

சாஸ் செய்ய

சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
தண்ணீர் – 2 மேசைக்கரண்டி
நாட்டு சர்க்கரை – 1 தேக்கரண்டி
சோளமாவு – 2 தேக்கரண்டி

சில்லி கார்லிக் எண்ணெய் செய்ய

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
பூண்டு – 10 பற்கள்
சில்லி பிளேக்ஸ் – 2 தேக்கரண்டி

ஸ்பைசி கார்லிக் சிக்கன் செய்ய

சில்லி கார்லிக் எண்ணெய் – 3 தேக்கரண்டி
இஞ்சி நீளவாக்கில் நறுக்கியது
சிவப்பு மிளகாய்
பச்சை மிளகாய்
வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
குடைமிளகாய் – 1/4 நீளவாக்கில் நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம்
வெங்காயத்தாள்
வறுத்த பூண்டு
தயார் செய்த சாஸ்
பொரித்த சிக்கன்
வெள்ளை எள்ளு (விரும்பினால்)

செய்முறை:
சிக்கனை ஊறவைக்க:
1. சிக்கனில் பூண்டு, இஞ்சி, உப்பு, மிளகு தூள், சோயா சாஸ், சோளமாவு சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
2. பின்பு முட்டையின் வெள்ளை கரு மற்றும் சோளமாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
3. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சிக்கனை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சாஸ் செய்ய:
4. ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், தண்ணீர், நாட்டு சர்க்கரை, சோளமாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.

சில்லி கார்லிக் எண்ணெய் செய்ய:
5. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு சேர்த்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும் பின்பு அதே எண்ணையில் சில்லி பிளேக்ஸ் சேர்த்து பொரித்து பின்பு எண்ணெயை வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளவும்.

ஸ்பைசி கார்லிக் சிக்கன் செய்ய:
6. கடாயில் சில்லி கார்லிக் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், வெங்காயம், குடைமிளகாய், வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. பின்பு பொரித்த பூண்டு சேர்த்து வதக்கி பிறகு தயாரித்த சாஸ்சை ஊற்றி கலந்து கொள்ளவும்.
8. அடுத்து பொரித்த சிக்கனை சேர்த்து கலந்துவிடவும்.
9. கடைசியாக வெங்காயத்தாள் மற்றும் வெள்ளை எள்ளு சேர்த்து கலந்து இறக்கவும்.
10. ஸ்பைசி கார்லிக் சிக்கன் தயார்!

Today we are going to see best non veg chicken starter recipe – Restaurant style Garlic chicken fry, Making of this tasty recipe is very easy and best taste guaranteed if you follow the tips and steps illustrated in the video, with slight variations in ingredients with similar method we can make pepper garlic chicken, butter garlic chicken, Honey garlic chicken, creamy garlic chicken , gravy garlic chicken and dry garlic chicken. Preparation method is similar to any chicken starter recipe marinating and making the garlic chicken. Hope you try this yummy recipe at your home and enjoy.

Our Other Recipes:
சிக்கன் கிழி பரோட்டா: https://youtu.be/KXtRT7cCPaY
ஹைதராபாதி சிக்கன் குருமா: https://youtu.be/Viwqp5aGUpU
Egg Bhurji : https://youtu.be/_Ag8F6rD7Ew
Andhra Style Chicken Fry : https://youtu.be/EaWkY3P6TT4
Crab Masala : https://youtu.be/VsPQsZrClfM
Chettinad Pepper Chicken Masala : https://youtu.be/dq3__hTaSLk
Spicy Chicken Roast : https://youtu.be/N_fggbWwmXQ
Chicken Dum Biryani : https://youtu.be/gizonMwkbc0
Kadai Chicken : https://youtu.be/RNvuShwGyf8
Chettinad Chicken curry : https://youtu.be/tAF-7uVZupc

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-03-04 09:00:15
Likes 292
Views 19015
Duration 7:2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..