கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பீஸ் | Kids Lunchbox Recipes In Tamil | @HomeCookingTamil
Description :
கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பீஸ் | Kids Lunchbox Recipes In Tamil | @HomeCookingTamil
#kidslunchboxrecipe #kidsrecipesintamil #sandwichrecipes #gheericerecipeintamil
Chapters:
Promo – 00:00
Ghee Rice – 00:24
Veg Mayo Sandwich – 03:53
Mushroom Pasta – 08:14
Corn Fried Rice – 10:50
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
நெய் சோறு
தேவையான பொருட்கள்
நெய் – 2 மேசைக்கரண்டி
பாஸ்மதி அரிசி – 1 கப் (250 மில்லி)
பட்டை – 2 சிறிய துண்டு
அன்னாசி பூ – 2
ஏலக்காய் – 4
பிரியாணி இலை – 2
கிராம்பு – 6
ஜாவித்ரி – 2 சிறிய துண்டு
வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 கீறியது
தட்டிய இஞ்சி பூண்டு
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 3/4 கப்
முந்திரி பருப்பு
திராட்சை
செய்முறை
1. பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
2. இஞ்சி பூண்டு ஒன்றாக போட்டு தட்டவும்.
3. பிரஷர் குக்கர்’ரில் நெய் ஊற்றவும்.
4. இதில் பட்டை, அன்னாசி பூ, ஏலக்காய், பிரியாணி இலை, ஜாவித்ரி, வெங்காயம் போட்டு வதக்கவும்.
5. பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
6. இதில் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
7. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்.
8. மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
9. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் குக்கர்’ரை மூடவும்.
10. ஆவி வந்ததும் வெயிட் போட்டு 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
11. முந்திரி பருப்பு, திராட்சை வறுக்கவும்.
12. பிரஷர் போன பின், குக்கர்’ரை திறக்கவும்.
13. இதன் மேல் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
14. நெய் சோறு தயார்.
வெஜ் மயோ சான்விச்
தேவையான பொருட்கள்
பச்சை குடைமிளகாய் நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் நறுக்கியது
மஞ்சள் குடைமிளகாய் நறுக்கியது
வெள்ளரிக்காய் விதை நீக்கி நறுக்கியது
கேரட் – 1 துருவியது
முட்டைகோஸ் நறுக்கியது
வெங்காயத்தாள் கீரை நறுக்கியது
உப்பு – 1/4 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள்
மயோனைஸ்
பிரட் துண்டுகள்
சீஸ் ஸ்லைஸ்
வெண்ணெய்
செய்முறை
1. பாத்திரத்தில், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், வெள்ளரிக்காய், கேரட், முட்டைகோஸ், வெங்காயத்தாள் கீரை, உப்பு, சில்லி பிளேக்ஸ்,
மிளகு தூள் மற்றும் மயோனைஸ் சேர்த்து கிளறவும்.
2. பிரட் துண்டின் ஓரங்களை வெட்டி, செய்த காய்கறி கலவை வைத்து, சான்விச்’சை மூடவும்.
3. உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டி சாப்பிடவும்.
4. கிரில் சான்விச் செய்ய, பிரட் துண்டின் மீது காய்கறி கலவை போட்டு, இதை மேல் சீஸ் ஸ்லைஸ் வைத்து, சான்விச்’சை மூடவும்.
5. க்ரில் பேன்’னில் வெண்ணெய் போட்டு, சான்விச் வைத்து, இருபுறமும் டோஸ்ட் செய்யவும்.
காளான் பாஸ்தா
தேவையான பொருட்கள்
பென்னே பாஸ்தா – 1 கிண்ணம்
காளான் – 400 கிராம்
வெண்ணெய் – 2 துண்டு
ஆலிவ் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 6 பற்கள் பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
மைதா – 2 மேசைக்கரண்டி
பால் – 2 கப் காய்ச்சி ஆறவைத்தது
சீஸ் – 2 துண்டு
உப்பு
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
இட்டாலியன் சிசனிங் – 2 தேக்கரண்டி
செய்முறை:
1. கொதிக்கின்ற தண்ணீரில் உப்பு மற்றும் பாஸ்தாவை சேர்த்து 15 நிமிடம் வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
2. கடாயில் வெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.
3. பின்பு நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. பிறகு நறுக்கிய காளான் மற்றும் உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சிசனிங் சேர்த்து 5 நிமிடம் அதிக தீயில் வேகவிடவும்.
5. பின்பு மைதா சேர்த்து கலந்து பிறகு பால் சேர்த்து கலந்துவிடவும்.
6. பிறகு சீஸ் துண்டுகளை சேர்த்து கலந்து வேகவிடவும்.
7. சுவையான காளான் பாஸ்தா தயார்!
கார்ன் ப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1 கப் (30 நிமிடம் ஊறவைத்தது)
ஸ்வீட் சோளம் – 1 கிண்ணம் வேகவைத்தது
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
பூண்டு – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/2 கப் நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1/2 கப் நறுக்கியது
உப்பு
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
வினிகர் – 2 தேக்கரண்டி
வெங்காயத்தாள்
செய்முறை:
1.அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
3. அனைத்தையும் கலந்து ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். அரிசி முழுவதுமாக வேகும் வரை வேகவைக்கவும். வடிகட்டி தனியாக வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெயை சூடாக்கவும்.
5. நறுக்கிய பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அதிக தீயில் வதக்கவும்.
6. அதில் பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
7. அடுத்து, சமைத்த சோளக் கருவைச் சேர்த்து மேலும் சில நொடிகள் வதக்கவும்.
8. உப்பு, மிளகு சேர்த்து நன்கு கலக்கவும். சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்க்கவும்.
9. சமைத்த அரிசியை மெதுவாக வாணலியில் சேர்த்து கலக்கவும்.
10. கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம் மற்றும் வெங்காயத்தாள் கீரையை சேர்க்கவும்.
11. கார்ன் ஃப்ரைடு ரைஸ் சூடாக பரிமாற தயாராக உள்ளது.
Kids like to eat different varieties all the time. So today, I have put together four wonderful recipes for them to enjoy in their lunchboxes. These are ghee rice, veg mayo sandwich, mushroom pasta and corn fried rice. Each recipe is unique and different. You can make one each day and surprise them. Make sure you cool them a bit before packing to avoid moisture in the box. This way, the food will remain as it is without any softness. Do try these recipes and enjoy.
Date Published | 2023-11-16 09:09:58 |
Likes | 377 |
Views | 36930 |
Duration | 14:59 |