இறால் பிரியாணி / புலாவ் / Prawn Briyani / Pulav சுலபமாகச் செய்யக்கூடிய அசத்தலான இறால் பிரியாணி
Description :
தேவையான பொருட்கள் ;
இறால் உரித்த பின்பு -அரைகிலோ ,
பாசுமதி அரிசி -2 கப்
எண்ணெய் – 50 +25 மில்லி,நெய் – 50 மில்லி
ஏலம்,பட்டை கிராம்பு – தலா 2
வெங்காயம்-150 கிராம்,
தக்காளி -150 கிராம்,
மிளகாய் -4
தயிர் – கால் கப்
இஞ்சிபூண்டு பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலா (ஏலம் பட்டை கிராம்புத்தூள்)- அரைஸ்பூன் அதனுடன் சோம்புத்தூள் அரைஸ்பூன்,சீரகத்தூள் அரைஸ்பூன்,
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்,
நறுக்கிய மல்லி,புதினா – கைபிடியளவு.
எலுமிச்சை-பாதி பழம்,
பிரியாணி இலை அல்லது ரம்பை இலை,
உப்பு- தேவைக்கு.
இறாலை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு அலசி,உப்பு,மஞ்சள் போட்டு திரும்பவும் அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.பின்பு ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு,உப்பு,அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கலந்து அரைமணி நேரம் வைக்கவும்.
மசாலா கலந்து வைத்த இறாலை ஒரு பேனில் 1-2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும்.
பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்து,வெங்காயம் சிவந்ததும்,இஞ்சிபூண்டு சேர்த்து,வதக்கவும்.
வதங்கிய இஞ்சி பூண்டு வகைகளுடன்,மல்லி புதினா ,மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தலா அரை டீ ஸ்பூன் மிளகாய்த்தூள் கரம்மசாலா,சீரகம்,சோம்பு பொடி,உப்பு சேர்த்து வதக்கி பின்பு சிறிது மூடி வைத்தால் தக்காளி மசிந்து எண்ணெய் மேலெழும்பி வரும். பின்பு வதக்கி வைத்த இறாலை சேர்ககவும்.
பிரியாணி மசாலா ரெடியானவுடன் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும், சிறிது நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.ஒன்றரை அளவு(காய்ந்த அரிசியாக இருந்தால் சிறிது தண்ணீர் அதிகம்
சேர்த்து )கொதி நீர் சேர்த்து வேக வைக்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
அடுப்பை மீடியமாக வைக்கவும்.அரிசி வெந்து மலர்ந்து வரும் பொழுது எலுமிச்சை பிழியவும்.மூடி விடவும்.சாதம் முக்கால் பதம் வெந்ததும் அடுப்பை குறைக்கவும்.
பிரியாணி பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி தம் போடவும்.அடிகனமான பாத்திரமாக இருக்க வேண்டும்.10-15 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
பிரியாணி பக்குவமாக வெந்து இருக்கும்.பிரட்டி சுடச்சுட பரிமாறவும்.சுவையான இறால் பிரியாணி ரெடி.
சில பேர் வயிற்றுக்கு இறால் ஒத்துக்கொள்ளாது அவர்கள் இதில் சீரகம்,சோம்பு,தயிர்,எலுமிச்சை சேர்ப்பதால் தைரியமாக சாப்பிடலாம்.வயிற்றுக்கு பிரச்சனை செய்யாது.இதுவே காரம் போதுமான அளவு இருக்கும்,விரும்பினால் கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்.எப்பவும் இறால் வாங்கியதும் உரித்து உடனே சமைத்தால் ருசி அருமையாக இருக்கும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் வடித்து மிக்ஸ் செய்து தம் போட்டால் அதன் ருசியும் பிரமாதமாக இருக்கும்.நான் எப்பவும் வடித்து தான்
போடுவது வழக்கம்,சிலர் வடித்து செய்ய விரும்ப மாட்டார்கள்,அவர்களுக்காக இந்த முறையில் கொடுத்து இருக்கிறேன்.
Date Published | 2018-03-16 07:33:49Z |
Likes | 52 |
Views | 3016 |
Duration | 0:03:55 |
Yummy biryani. Basmati rice 2 cup means, what is one cup in ml measure? Thank you
Lighting kammiya erukku puriala
ஆசியாஜீ சலாம் அலேக்கம் புலவ் சூப்பர் சிம்பிள் ஆனா சூப்பர் ஜீ
Measurements kuduga ma
super.ma