ஆல் இன் ஆல் அழகு ஆணம்- எங்க ஊரு ஸ்பெஷல்

ஆல் இன் ஆல் அழகு ஆணம்- எங்க ஊரு ஸ்பெஷல் / Plain salna

Description :

#ப்லைன்சால்னா #தக்காளிஆணம் #தக்காளிசால்னா #Plainsalna
தேவையான பொருட்கள்;
தக்காளி – 200 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரைடீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மல்லி கருவேப்பிலை – சிறிது
தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன் + முந்திரி பருப்பு – 3(அரைக்க)
எண்ணெய் – 2டேபிள்ஸ்பூன்
கடுகு ,உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1
உப்பு -தேவைக்கு
செய்முறை:-
தக்காளி,வெங்காயத்தை இப்படி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் நறுக்கிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி பூண்டு,கரம் மசாலா,மஞ்சள்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.தாளிக்க சிறிது நறுக்கிய வெங்காயம் தனியாக எடுத்து வைக்கவும்.
இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.பச்சை மிளகாய்,சிறிது நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
மூடி குக்கரை 2 விசில் விடவும் அடுப்பை அணைக்கவும்.திறந்தால் இப்படியிருக்கும்.
அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைக்கவும்.தேவைக்கு தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
நன்கு கொதித்து தேங்காய் வாடை மடங்கட்டும்.வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் கடுகு,உளுத்தம் பருப்பு சேர்க்கவும்,பின்பு வெந்தயம் சேர்க்கவும்,வற்றல்,கருவேப்பிலை சேர்த்து வெடிக்கவும்,சிறிது நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் தாளிச்சதை கொதித்து கொண்டிருக்கும் தக்காளி ஆணத்தில் சேர்த்து கலந்து விடவும்.
சுவையான தக்காளி ஆணம் ரெடி.
இதனை வெறும் சோறு, இட்லி,தோசை,சப்பாத்தி,ஆப்பம்,இடியாப்பம்,பரோட்டா ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

முக்கிய குறிப்பு:
சாதத்தில் ரசம் போல் ஊற்றி சாப்பிட தேங்காய் அரவைக்கு பதில் 1 கப்
சோறு வடித்த கஞ்சி சேர்க்கவும்.கலந்து விட்டு கொதி வரவும், தாளித்து உபயோகிக்கலாம்.இது மிகவும் ருசியாக இருக்கும்.இந்த வெறும் சோறு, தக்காளி ஆணத்திற்கு தொட்டுக் கொள்ள வெங்காய முட்டை ஆம்லட் சூப்பர் காம்பினேஷன்.இது ஊரில் எங்க வீட்டில் அண்ணிகள் அடிக்கடி செய்யும் ஆணம். சிம்பிளாகவும் ருசியாகவும் இருக்கும்.


Rated 4.79

Date Published 2018-03-23 06:13:00Z
Likes 108
Views 9349
Duration 0:05:50

Article Categories:
Tamil · Tamilnadu

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Madam please ennakku melapalayam thalcha recipe eyppadi seiyanum konjam sollunga pls madam

    Ali Basha August 12, 2019 6:56 am Reply
  • Madam, neenga munadi potta milagu potta salna recipe hotel la 2salna tharrnga antha milagu salna recipe podungama. Thanks madam.

    Antony Josephine July 24, 2019 8:15 am Reply
  • samayalukku kal uppu use pannuga

    nivedha gnanasekaran May 14, 2019 3:11 am Reply
  • Hi ma ,10 members ku mutton kulambu thick ah vaikradhuku incredients alavu sollunga ma

    Ruba Ruba May 7, 2019 10:18 am Reply
  • என் பெயர் ஜீலைஹா நூர் அக்கா உங்க நம்பர் கிடைக்குமா அக்கா நான் இஸ்லாமிய பெண் தான ் please

    suha kitchen March 27, 2019 7:13 am Reply
  • Neenga yentha ooru sister

    N ISHAAQ March 25, 2019 4:13 pm Reply
  • Very nice ma

    kani kani March 7, 2019 8:06 am Reply
  • aslamualikum unga family members indedus sainga ma.home tore podunga

    Jenna basith February 25, 2019 3:09 pm Reply
  • Assalamualaikum… Indha aanathukku thottukka enna nalla irukkum ma

    Ramesa Mubarak February 23, 2019 7:02 pm Reply
  • அஸ்ஸலாமு அலைக்கும். மாஷா அல்லாஹ் அருமை.இன்ஷா அல்லாஹ் நாளைக்கு செய்துபார்க்கிறேன்.நன்றி

    Rameeza Abdulrahman February 17, 2019 2:22 pm Reply
  • Inaiku than na unga videos parkuraen

    Sheeba Abdullah February 15, 2019 8:48 am Reply
  • Amma unga native ethu

    Sheeba Abdullah February 15, 2019 8:47 am Reply
  • Assalamu alaikum ma

    Imambbmba Imambbmba February 12, 2019 1:25 pm Reply

Don't Miss! random posts ..