உருளைக்கிழங்கு பட்டாணி புலாவ் | Aloo Matar Pulao In Tamil

உருளைக்கிழங்கு பட்டாணி புலாவ் | Aloo Matar Pulao In Tamil

Description :

உருளைக்கிழங்கு பட்டாணி புலாவ் | Aloo Matar Pulao In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

#உருளைக்கிழங்குபட்டாணிபுலாவ் #HomeCooking #PulaoRecipes
#AlooMatarPulao # LaunchBoxRecipes

தேவையான பொருட்கள்

நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 6
ஏலக்காய் – 2
அன்னாசிப்பூ – 1
பிரியாணி இலை – 1
பெரிய வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு – 1 தேக்கரண்டி இடித்தது
தக்காளி – 2 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 1/4 தேக்கரண்டி
பச்சை பட்டாணி – 1/2 கப் வேகவைத்து
உருளைகிழங்கு – 3 வேகவைத்து நறுக்கியது
கரம் மசாலா தூள் – 1/4 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு – 1/2 பழம்
கொத்தமல்லி இலை
புதினா இலை
பாஸ்மதி அரிசி – 1 கப்
தண்ணீர் – 1 3/4 கப்

செய்முறை
1. ஒரு பிரஷர் குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தட்டிய இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
2. அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. தக்காளி வதங்கியதும், இதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
4. அடுத்து வேகவைத்த பச்சைப் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. இதில் கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து கலக்கவும்.
6. இறுதியாக கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் கூறப்பட்டுள்ள அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.
7. குக்கரில் ஆவி வந்தவுடன் வெயிட்டை போட்டு, மிதமான சூட்டில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
8. பிரஷர் இறங்கியதும், குக்கரை திறந்து உருளைக்கிழங்கு பட்டாணி புலாவ்வை சூடாகப் பரிமாறவும்.

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.92

Date Published 2020-01-26 05:00:00Z
Likes 334
Views 11304
Duration 0:03:39

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..