எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு மிகவும் சுவையாக செய்வது எப்படி/கத்தரிக்காய் குழம்பு/Katharikkai Kulambu
Description :
#Eggplantcurry
#Katharikkaikulambu
#Brinjalcurry
தேவையான பொருட்கள்
தேவையான அளவு எண்ணெய்
3 பெரிய வெங்காயம்
நான்கு நன்கு கனிந்த தக்காளிப் பழங்கள்
இவை இரண்டையும் நன்கு வதக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
தேவையான அளவு எண்ணெய்
அரைத் தேக்கரண்டி கடுகு
கால் தேக்கரண்டி வெந்தயம்
அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
அரைக் கிலோ கத்தரிக்காய்
கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி
ஒரு முழு தேக்கரண்டி சாம்பார் பொடி
சக்தி சாம்பார் மசாலா பயன்படுத்தவும்
அரை தேக்கரண்டி வத்தல் பொடி ( மிளகாய் பொடி)
சிறு அரை முறி தேங்காயை துருவி அதை நன்கு அரைத்துக் கொள்ளவும்…. அரைத்த தேங்காயை கலந்து கொள்ளவும்
வெங்காயம் மற்றும் தக்காளியை அரைத்து கத்தரிக்காயுடன் சேர்த்துக் கொள்ளவும்….
தேவையான அளவு தண்ணீர், சிறிதளவு புளித் தண்ணீர்,மற்றும் உப்பு சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து 5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்….. சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி.
இந்த குழம்பு மிகவும் சுவையாக இருந்தது இதே போல உங்கள் வீட்டிலும் சமையல் செய்து சாப்பிட்டு மகிழுங்கள் மிக்க நன்றி.
Date Published | 2019-08-06 09:27:49Z |
Likes | 194 |
Views | 21525 |
Duration | 0:04:19 |