நெத்திலி மீன் குழம்பு | Nethili Fish Curry Recipe in Tamil

நெத்திலி மீன் குழம்பு | Nethili Fish Curry Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

நெத்திலி மீன் குழம்பு

தயாரிப்பு நேரம் – 15 நிமிடங்கள்
சமையல் நேரம் – 40 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

தேங்காய் மசாலா விழுது தயாரிக்க

தேங்காய் – 1/2 கப் (துருவிய)
சீரகம் – 1/2 தேக்கரண்டி
தண்ணீர்

நெத்திலி மீன்
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கிய )
பச்சை மிளகாய் – 2 (நறுக்கிய)
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 1 (பொடியாக நறுக்கிய)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
புளிக்கரைசல் – 1/2 கப்
கறிவேப்பிலை
தண்ணீர்
தேவையான அளவு உப்பு

#நெத்திலிமீன்குழம்பு #NethiliFishCurry #மீன்குழம்பு
செய்முறை

1. முதலில் துருவிய தேங்காய், சீரகம், தண்ணீர் சேர்த்து அரைத்து அரைத்துக்கொள்ளவும்
2. அடுத்தது ஒரு மண் சட்டியில் தேங்காய் எண்ணையை சூடேற்றிய பிறகு கடுகு, வெந்தயம், பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
3. வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்
4. இந்த கலவையில் புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் மசாலா விழுது, கறிவேப்பிலை சேர்த்து மூடிய நிலையில் பத்து நிமிடத்திற்கு கொதிக்க விடவும்
5. குழம்பு கொதிநிலையை அடைந்தவுடன் சுத்தம் செய்த நெத்திலி மீனை சேர்க்கவும்
6. நெத்திலி மீனை கரண்டியை வைத்து கிளறாமல் மண் சட்டியை மெதுவாக தூக்கி அசைத்து கலக்கவும்
7. மேலும் ஐந்து நிமிடத்திற்கு மீன் குழம்பை மூடிய நிலையில் சமைக்கவும்
8. சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்
9. இந்த நெத்திலி மீன் குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOME COOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH…
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…

A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.9

Date Published 2019-02-13 11:27:32Z
Likes 594
Views 34137
Duration 0:03:07

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..