சுவையான காளான் ரெசிப்பீஸ் | Mushroom Recipes In Tamil | Mushroom Biryani | Mushroom Curry
Description :
சுவையான காளான் ரெசிப்பீஸ் | Mushroom Recipes In Tamil | Mushroom Biryani | Mushroom Curry | @HomeCookingTamil
#mushroomrecipes #kalanbiryani #mushroomcurry #mushroomsoup
Chapters:-
Promo – 00:00
Mushroom Curry: 00:16
Mushroom Biryani: 03:53
Butter Garlic Mushroom: 08:37
Mushroom Soup: 11:21
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
காளான் கறி
தேவையான பொருட்கள்
காளான் – 600 கிராம்
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
ஷாஹி ஜீரா – 1தேக்கரண்டி
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 5 நீளவாக்கில் நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தக்காளி விழுது – 6 பழம்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சீரக தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
கஷ்மீரி மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர் – 1 1/2 கப்
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. காளானை நறுக்கி வைத்து கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஷாஹி ஜீரா சேர்க்கவும்.
3. அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 2 நிமிடத்திற்கு பிறகு தக்காளி விழுது சேர்த்து மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
5. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், கஷ்மீரி மிளகாய் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6. பின்பு நறுக்கிய காளானை சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
7. பிறகு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
8. அடுத்து கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து விட்டு 3 நிமிடம் சிம்மில் வேகவிடவும்.
9. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
10. சுவையான காளான் கறி தயார்.
காளான் பிரியாணி
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
பூண்டு – 3 பற்கள் நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
தேங்காய் – 1 மேசைக்கரண்டி துருவியது
சில்லி பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி
புதினா இலை
கொத்தமல்லி இலை
தண்ணீர் – 2 தேக்கரண்டி
பிரியாணி செய்ய
பாஸ்மதி அரிசி – 1 கப் (250 மில்லி கப்)
காளான் – 400 கிராம்
நெய் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பட்டை – 1
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
அன்னாசிப்பூ – 1
பிரியாணி இலை – 1
வெங்காயம் – 3 நறுக்கியது
தக்காளி – 3 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
புதினா இலை
கொத்தமல்லி இலை
தண்ணீர் – 1 கப்
செய்முறை:
1. பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊறவிடவும்.
2. மிக்ஸர் ஜாரில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், துருவிய தேங்காய், சில்லி பேஸ்ட், புதினா, கொத்தமல்லி மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3. குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்க்கவும்.
4. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
5. பின்பு தக்காளியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
6. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
7. பிறகு நறுக்கிய காளானை சேர்த்து வதக்கவும். பின்பு புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்துவிடவும்.
8. அடுத்து ஊறவைத்த அரிசியை சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஆவி வர ஆரம்பித்ததும் விசிலை போட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவைத்து இறக்கவும்.
9. காளான் பிரியாணி தயார்!
பட்டர் கார்லிக் காளான்
தேவையான பொருட்கள்
உப்பில்லாத வெண்ணெய் – 100 கிராம்
வெங்காயம் – 1 நறுக்கியது
காளான் – 600 கிராம்
பூண்டு – 1/4 கப் பொடியாக நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
2. பின்பு காளான் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
3. பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
4. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து காளான் பொன்னிறமானதும் இறக்கவும்.
5. பட்டர் கார்லிக் காளான் தயார்.
காளான் சூப்
தேவையான பொருட்கள்
காளான் – 500 கிராம்
உப்பில்லாத வெண்ணெய் – 50 கிராம்
பூண்டு – 5 பற்கள் மெல்லியதாக நறுக்கியது
வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகு
தண்ணீர்
செய்முறை
1. கடாயில் வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
2. இதில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து இதில் நறுக்கிய காளான் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
4. காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.
5. தண்ணீர் வற்றிய பின், இதில் தண்ணீர் ஊற்றவும்.
6. கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
7. காளான் கலவையை ஆறவிடவும்.
8. இதை மிக்ஸில் போட்டு அரைக்கவும்.
9. அரைத்த விழுதை கடாயில் போட்டு கொதிக்கவிடவும்.
10. ஆரோக்கியமான காளான் சூப் தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-11-07 11:30:20 |
Likes | 367 |
Views | 22758 |
Duration | 15:11 |