புதினா சாதம் | Puthina Rice Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
புதினா சாதம் | Puthina Rice in Tamil
தேவையான பொருட்கள்
நெய் – 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 1
வெங்காயம் – 1
கறிவேப்பிலை
வறுத்த வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி
தக்காளி – 1
புதினா விழுது தயாரிக்க
எண்ணெய் – 3 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
புதினா இலைகள் – 1 கொத்து
கொத்தமல்லி இலைகள் – 1/2 கொத்து
தேங்காய்
புளி – 1 துண்டு
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
#புதினாசாதம் #PuthinaRice #MintRice
செய்முறை
1. புதினா சாதம் தயாரிக்க முதலில் புதினா விழுது அரைக்க வேண்டும். அதற்க்கு ஒரு கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்
2. அடுத்து இந்த வதக்கியவற்றில் துருவிய தேங்காய், தண்ணீரில் ஊறவைத்த புளி ஒரு துண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வாதிக்கிய பின்பு சிறிது நேரம் ஆற விட்டு மிக்ஸில் சேர்த்து நன்கு அரைக்கவும்
3. அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து சூடேற்றிய பின்பு அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
4. வெங்காயம் பொன்னிறமானவுடன் அதில் வறுத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
5. இதில் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை மனம் போகும் வரை நன்கு வதக்கவும்
6. இறுதியாக இந்த கலவையில் வேகவைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறவும்
7. சுவையான மற்றும் ஆரோக்கியமான புதினா சாதம் தயார்
8. அப்பளம் அல்லது வத்தல் சேர்த்து பரிமாறவும்
Date Published | 2019-06-24 11:53:57Z |
Likes | 566 |
Views | 34017 |
Duration | 0:04:19 |
Really yummy mam… I tired today… So tasty…. Looking fwd for more dishes like tis mam…. Mainly dishes for paleo diet☺
Home cooking book available address
அதிகமாக கிளறுவது very irritating ah இருக்கு எல்லா dish வும் கிளறுவது over ah இருக்கு
super mam
super mam.
Wow sema
Man pls upload kitchen tour…
Mam loving this viedo. Love you too. All the best ka
Hi mam ur videos amazing
I love it
Superrrrrrr mam pakum bodhey try pannanum nu thonudhu
Wow super yummy mouth watering
Check out புதினா புலாவ் https://youtu.be/UUO6sRCLlHw
I'm first view mam….. Super dish