சென்னை வட கறி | Vada Curry Recipe Tamil #vadacurry #sidedishrecipe #sidedishfordosa #cooking
Description :
சென்னை வட கறி | Vada Curry Recipe Tamil | South Indian Special Vada Curry | Side Dish for Idli Dosa | @HomeCookingTamil
#சென்னைவடகறி #vadacurryrecipe #southindianstyle #SideDishforIdliDosa #homecookingtamil
#vadacurry #food #co#cooking
சென்னை வட கறி
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – 200 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
சோம்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய்
பிரியாணி இலை – 2
கிராம்பு
பட்டை
ஏலக்காய் – 2
சோம்பு – 1 தேக்கரண்டி
அன்னாசிப்பூ – 1
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 5 கீறியது
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
தக்காளி – 2 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
தண்ணீர்
கொத்தமல்லி இலை – நறுக்கியது
செய்முறை
1. நன்கு கழுவிய கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறிய பருப்பை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
3. அடுத்து ஒரு பானில் அரைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் உதிரி உதிரியாக வரும் வரை வறுக்கவும்.
4.பின்பு ஒரு கடாயில் எண்ணெய், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய், சோம்பு, அன்னாசிப்பூ சேர்த்து கலந்து விடவும்.
5. நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
6. வெங்காயம் பொன்னிறமானவுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து கலந்து விடவும்.
7. தக்காளி வெந்தவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து விடவும்.
8. அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
9. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பருப்பு கலவையை சேர்த்து கலந்து விட்டு கடாயை மூடி 10 நிமிடம் வேகவைக்கவும்.
10. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
11. சுவையான வட கறி தயார்.
Date Published | 2024-09-08 08:30:02 |
Likes | 3106 |
Views | 123450 |
Duration | 1: |