ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய் | Andhara Special Stuffed Brinjal In Tamil | Brinjal Fry |

ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய் | Andhara Special Stuffed Brinjal In Tamil | Brinjal Fry |

Description :

ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய் | Andhara Special Stuffed Brinjal In Tamil | Brinjal Fry |

#ஆந்திரஸ்பெஷல்ஸ்டப்டுகத்தரிக்காய் #andhraspecialstuffedbrinjal #brinjalfry #stuffedbrinjal #andhrastylerecipe #homecooking #kathirikaifry #brinjalrecipe #sidedishrecipe #sidedishforrice
#kathirikai #brinjal #sidedishforrasam #sidedishforsambar #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Andhara Style Stuffed Brinjal: https://youtu.be/bRYivg7pdsQ

Our Other Recipes:
ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பச்சடி: https://youtu.be/LcDpqnOeyLM
ஆந்திர ஸ்டைல் சில்லி சிக்கன்: https://youtu.be/t7-lGd2a9ww

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய்
தேவையான பொருட்கள்

மசாலா தூள் அரைக்க

எண்ணெய் – 1 தேக்கரண்டி
தனியா – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 6
பூண்டு – 2 பற்கள் நீளவாக்கில் நறுக்கியது
எள்ளு – 1 தேக்கரண்டி
கொப்பரை தேங்காய் – 1/4 கப் துருவியது

ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய் செய்ய

கத்திரிக்காய் – 1/2 கிலோ
உப்பு
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
அரைத்த மசாலா பொடி
கறிவேப்பிலை

செய்முறை
1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் தனியா, சீரகம், கடலை பருப்பு, வேர்க்கடலை, மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
2. மசாலா பொன்னிறமாக மாறியதும் அதில் நீளவாக்கில் நறுக்கிய பூண்டு மற்றும் எள்ளு சேர்த்து வறுக்கவும்.
3. பிறகு கொப்பரை தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, நன்கு ஆறவிடவும்.
4. ஆறியதும் தூளாக அரைத்து கொள்ளவும்.
5. கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்த கலவையை தடவவும்.
6. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கத்திரிக்காயை போட்டு வதக்கவும்.
7. பாதி வதங்கியதும் நன்கு ஆறவிடவும். ஆறியதும் கத்தரிக்காயை மெதுவாக பிரித்து அதனுள் அரைத்த மசாலா தூளை வைத்து மூடவும்.
8. பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பிறகு கத்தரிக்காவை போட்டு வதக்கவும்.
9. அடுத்து ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
10. பிறகு கத்தரிக்காயை திருப்பி விட்டு மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
11. 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கினால் ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.89

Date Published 2021-06-28 09:00:13
Likes 419
Views 20063
Duration 5:20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..